Published : 06 Feb 2019 06:45 PM
Last Updated : 06 Feb 2019 06:45 PM

ஹோல்டரைத் தடை செய்ததற்காக இந்த அற்புதத் தொடரை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமா? என்ன வெட்கக்கேடு: மே.இ.தீவுகள் வாரியத் தலைவர் பாய்ச்சல்

இரண்டரை நாட்களில் முடிந்த ஆண்டிகுவா டெஸ்ட் போட்டியில் குறித்த நேரத்தில் கொடுக்கப்பட்ட ஓவர்களை வீசவில்லை என்பதற்காக மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டரை ஐசிசி அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதித்த விவகாரம் கிரிக்கெட் உலகில் படு அசிங்கமான ஒன்றாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

 

இங்கிலாந்து 3-0 என்று ஒயிட்வாஷ் வாங்குவதை தவிர்க்க ஐசிசி வேலை செய்கிறதா என்ற ரீதியில் ரசிகர்கள் வலைத்தளங்களில் பாய்ந்துள்ளனர், ஷேன் வார்ன், மைக்கேல் வான் போன்றவர்களும் ‘முட்டாள்தனமான’ முடிவு என்று சாடியுள்ளனர்.

 

இந்நிலையில் மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் டேவ் கேமரூன் தன் பக்கம் உள்ள கோபத்தை நாகரிகமான முறையில் வெளிப்படுத்தியுள்ளார்.

 

“ஐசிசி விதிமுறைகளுக்குக் கட்டுப்படுகிறோம். ஆனால் டெஸ்ட் தொடரின் முக்கிய ஒரு கட்டத்தில் இம்மாதிரியான நடவடிக்கை டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆரோக்கியத்துக்கு நல்லதா என்றே கேட்கிறோம்.

 

புத்துணர்ச்சி பெற்ற மே.இ.தீவுகளின் அற்புதமான கிரிக்கெட்டுக்காக நினைவில் வைக்கப்பட வேண்டிய இந்தத் தொடர் ஜேசன் ஹோல்டர் தடைக்காக நினைவில் கொள்ளப்பட வேண்டும் என்பது வெட்கக்கேடு. இது ஒரு முடமாக்கும் தடை உத்தரவு, விதியை மாற்ற வேண்டும்.

 

ஆனால் என்ன செய்வது ஜேசன் தற்போது நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டு ஒருநாள் தொடருக்காக தயாராக வேண்டியதுதான்” என்று சாடியுள்ளார்.

 

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் கண்ணசைவுக்கு ஏற்ப ஆண்டிகுவா பிட்சிற்கு தகுதியிழப்புப் புள்ளிகள் கிடைக்கும் என்ற செய்திகள் வேறு பரவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x