நியூசிலாந்துக்கு எதிராக தொடர்ந்து ரன் குவிப்பில் ஸ்மிரிதி மந்தனா

நியூசிலாந்துக்கு எதிராக தொடர்ந்து ரன் குவிப்பில் ஸ்மிரிதி மந்தனா
Updated on
1 min read

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டங்களில் தொடர்ந்து ரன் குவித்து வருகிறார் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா.

ஸ்மிரிதி மந்தனா, மிதாலி ராஜின் அபரமான ஆட்டத்தால்  நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற இந்திய மகளிர் அணி முன்னிலை வகித்து தொடரை வென்றது.

இந்நிலையில் இன்று நடந்த 20 - 20 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ஸ்மிரிதி மந்தனா. இப்போட்டியில் மந்தனா 24 பந்துகளில் அரை சதம் அடித்து இந்த சாதனையை நிகழ்த்தினார்.

தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வரும் 22 வயதான மந்தனா  சிறப்பான ஃபார்மில் இருந்து வருகிறார். கடந்த 10 இன்னிங்ஸில் 9-வது முறையாக அரை சதம் அடித்துள்ளார்.  மேலும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள்தொடரின் முதல் ஆட்டத்தில் ஸ்மிரிதி மந்தனா 105 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டியின் மகளிருக்கான  தர வரிசையில் 751 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார் மந்தனா. இப்பட்டியலில் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in