ஆசிய டென்னிஸ்: இந்தியாவின் யூகி பாம்பரி வெண்கலப் பதக்கம்

ஆசிய டென்னிஸ்: இந்தியாவின் யூகி பாம்பரி வெண்கலப் பதக்கம்

Published on

ஆசிய விளையாட்டு ஆடவர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்பரி வெண்கலப் பதக்கம் வென்றார்.

இன்சியானில் இன்று நடைபெற்ற தனி நபர் பிரிவில் யூகி பாம்பரி, ஜப்பானின் நிஷியோகியாவை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் செட்டை யூகி 6- 3 எனக் கைப்பற்றினார். ஆனால் அடுத்தடுத்த இரண்டு செட்களை யூகி பாம்ப்ரி 2- 6, 1 - 6 என்ற கணக்கில் இழந்து தோல்வியைத் தழுவினார். அரையிறுதியில் தோல்வியடைந்தாலும் யூகி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியாவுக்கு 21-வது வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in