‘ஏபி’ என்ற செல்லப்பெயருடன் வளையவரும் ஆஸ்திரேலிய வீரர்

‘ஏபி’ என்ற செல்லப்பெயருடன் வளையவரும் ஆஸ்திரேலிய வீரர்
Updated on
1 min read

பந்து வீச்சில் ‘டெரர்’ ஆகத் திகழ்ந்து வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கமின்ஸ் பேட்டிங்கிலும் கலக்கி வருகிறார், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தற்போது இவரது ஆகிருதி பெரிய அளவில் வளர்ந்துள்ளது.

உலகக் கிரிக்கெட்டில் ‘ஏபி’ என்றால் அது 360 டிகிரி சுழன்று சுழன்று திகைப்பூட்டும் ஷாட்களை ஆடி அசத்தும் ஏ.பி.டிவில்லியர்ஸ் நினைவுதான் அனைவருக்கும் வரும், ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஓய்வறையில் தற்போது ‘ஏபி’ என்ற பெயரில் பாட் கமின்ஸ் வளையவருகிறார்.

சமீப காலமாக டெஸ்ட் போட்டிகள் உள்ளிட்ட வடிவங்களில் பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார் பாட்கமின்ஸ். அதற்காக இவரைப்போய் ‘ஏபி’ என்று அழைப்பதா என்று ஏபிடி ரசிகர்களுக்கு கோபம் கூட ஏற்படலாம்.

ஆனால் இந்த ஏபிக்கு அர்த்தம்  ‘ஆலன் பார்டர் பதக்கம்’ வென்ற பாட்கமின்ஸ் என்று பொருள், இதனையடுத்து அவர் ஆஸி.வீரர்களால் ஏபி என்று ஓய்வறையிலும் களத்திலும் அழைக்கப்பட்டு வருகிறார். ஆனால் ஆஸி.வீரர்கள் இவரை உற்சாகப்படுத்த, உத்வேகப்படுத்த ஏ.பி.டிவில்லியர்ஸை நினைவு படுத்தும் இந்தப் புனைப்பெயரை பாட்கமின்ஸுக்கு சூட்டி அழகு பார்க்கின்றனர்.

மெல்போர்னில் இந்தியாவுக்கு எதிராக 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாட்கமின்ஸ், அரைசதம் எடுத்து வெறுப்பேற்றினார், முன்னிலை ஆஸி.பவுலர்களெல்லாம் பும்ராவைக் கண்டு அலறிக்கொண்டிருக்கும் போது இவர் மட்டும் தைரியமாக ஆடினார், அதற்காக அவரை எம்.ஏ என்று வேண்டுமானால் அழைக்கலாம் அதாவது மொஹீந்தர் அமர்நாத் என்று அழைக்கலாம். ஆனால் ஏபி என்பது கொஞ்சம் டூமச்தான் ஆனால் அவர்கள் கூறுவது ஆலன் பார்டர் பதக்கம் வென்ற பாட் கமின்ஸ் என்ற அடிப்படையில் வெளிப்படையாக இருந்தாலும் உள்ளர்த்தமாக ஏ.பி டிவில்லியர்ஸை நினைவூட்டும் விதத்திலும் இந்த செல்லப்பெயர் அமைந்துள்ளது.

அன்று விசாகப்பட்டனம் டி20 போட்டியில் கூல்ட்டர் நைலுக்குப் பிறகு பேட் செய்தார். கடைசி பந்தில் வெற்றி பெற்றுக் கொடுத்தார்.

இப்போது ஆஸ்திரேலிய அணியின் பெரிய ஹீரோ பாட் கமின்ஸ்தான். அவரை ஏபி என்று அழைத்து அழகுபார்த்தால் என்ன தவறு என்கிறது ஆஸி. கிரிக்கெட் வட்டாரங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in