

வங்கதேசத்திற்கு எதிராக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய பேட்டிங் போராளி சந்தர்பால் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் டாப் 10 பவுலர்கள், பேட்ஸ்மென்களில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
40வயதான சந்தர்பால் வங்கதேசத்திற்கு எதிராக நேற்று முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 84 நாட் அவுட் மற்றும் 2வது இன்னிங்ஸில் 101 நாட் அவுட். இது அவரது 30வது டெஸ்ட் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 2 இன்னிங்ஸ்கள் மூலம் சந்தர்பால், இலங்கை கேப்டன் மேத்யூஸ், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 3வது இடம்பிடித்தார்.
வங்கதேச வீரர் தமிம் இக்பால் 7 இடங்கள் முன்னேறி 37வது இடத்திற்கு வந்தார். குமார் சங்கக்காரா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். 2ஆம் இடத்தில் உள்ள டிவிலியர்ஸைக் காட்டிலும் சங்கக்காரா 27 புள்ளிகல் முன்னிலை பெற்றுள்ளார்.
மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர் கிமார் ரோச் தனது அதிகபட்ச தரநிலையான 9வது இடத்தைப் பிடித்தார்.
இந்திய அணிக்கு ஒரே ஆறுதல் ஆல்ரவுண்டர்கள் தரநிலையில் அஸ்வின் முன்னிலை வகிப்பதே.