Published : 07 Feb 2019 02:51 PM
Last Updated : 07 Feb 2019 02:51 PM

இறுதியில் கைவிட்டார் புஜாரா; டக் அவுட்; 200 ரன் இலக்கை விரட்ட முடியாமல் சவுராஷ்ட்ரா தோல்வி: 2வது தொடர் ரஞ்சி கோப்பையை வென்ற விதர்பா

நாக்பூரில் இன்று முடிவுற்ற ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெறத் தேவையான 200 ரன்களை எடுக்க முடியாமல் சவுராஷ்ட்ரா அணி 58.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு மடிய விதர்பா அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடர்ச்சியாக 2வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது.

 

விஸ்வராஜ் ஜடேஜா மிகப்பிரமாதமாகப் போராடி 52 ரன்கள் எடுத்து ஸ்பின்னர் சர்வடே பந்தை ஸ்வீப் ஆட முயன்று எல்.பி.ஆக 103/8 என்பதோடு சவுராஷ்ட்ரா அணியின் வெற்றி பெறுவதற்கான கடைசி நம்பிக்கையும் முறிந்தது.  இடது கை ஸ்பின்னர் சர்வடே 10 விக்கெட்டுகளை இந்தப் போட்டியில் கைப்பற்றினார்.

 

கடந்த ரஞ்சி சாம்பியன் அணி வெற்றிகரமாக தங்களது சாம்பியன் அந்தஸ்தை தக்க வைத்த வகையில் விதர்பா அணி 6வது அணியாகும். சர்வடே 157 ரன்களுக்கு 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் பேட்டிங்கில் 2வது இன்னிங்சில் 49 ரன்கள் பங்களிப்பையும் செய்தார் சர்வடே.

 

மும்பையிடம் 2012-13-லும், பிறகு புனேயில் 2015-16 ரஞ்சி சீசனிலும் சவுராஷ்ட்ரா இறுதிப்போட்டியில் வந்து சாம்பியன் பட்டம் பெறாமல் போனது, இப்போது 3வது முறையாகும்.

 

காலிறுதி, அரையிறுதிகளில் டெஸ்ட் சுவர் செடேஸ்வர் புஜாரா அணியின் இதை விட பெரிய இலக்கை விரட்டி வெற்றி பெற்றுத் தந்தார், ஆனால் இம்முறை 2வது இன்னிங்சில் சர்வடே பந்து திரும்பும் என்று நினைத்தார் ஆனால் அது நேராக வந்து கால்காப்பைத் தாக்க டக்கில் எல்.பி.ஆனார்.

 

இன்றைக்கு 58/5 என்று தொடங்கிய சவுராஷ்டிரா ஸ்கோரை 88 வரை கொண்டு சென்றது. ஜடேஜாவும் மக்வானாவும் நிதானித்து ஆடினர். ஆனால் மக்வானா சர்வடே பந்தில் பவுல்டு ஆனார். பி.என்.மன்கர், வக்காரே என்ற ஸ்பின்னரிடம் எல்.பி.ஆனார். எல்.பி ஆனவர்கள் எல்லாம் பந்து திரும்பும் என்று ஆடி ஏமாந்தவர்களே. உனாட்கட், டி.ஏ.ஜடேஜா தாக்குப் பிடிக்கவில்லை. இருவரும் ஆட்டமிழக்க சவுராஷ்ட்ரா கனவு தகர்ந்தது.

 

ஆட்ட நாயகனாக ஆதித்யா சர்வடே தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x