

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் விமானப் படை வீரர்களை வெகுவாகப் பாராட்டியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக்.
கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தைக் குறிவைத்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணியளவில் இந்தியாவின் 12 மிராஜ் ஜெட் விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று சுமார் 1000 கிலோ வெடிகுண்டை தீவிரவாதிகள் முகாம்கள் மீது வீசின. இதில் பாகிஸ்தானில் இயங்கிய முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
விமானப்படையின் பதிலடிக்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு மிகுந்துவரும் நிலையில், "சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள்" என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சேவாக் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
கிரிக்கெட் அணியின் கேப்டன் தனது வீரர்களைப் பாராட்டுவதுபோல் "The boys have played really well" எனப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்பதாக ட்விட்டரில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.