

பிப்ரவரி 24ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கோலி, பும்ரா, ராகுல் இந்திய அணிக்குத் திரும்பினர். தினேஷ் கார்த்திக் டி20 அணியில் இருக்கிறார்.
உலகக்கோப்பை நெருங்கும் நேரத்தில் கடைசியாக விளையாடப்படும் இந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் அணியிலிருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார். கடைசியாக ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் தினேஷ் கார்த்திக் விளையாடினார். இந்நிலையில் தினேஷ் கார்த்திக் நீக்கம், உலகக்கோப்பை அணியிலிருந்தும் அவர் கழற்றி விடப்படுவார் என்ற ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது. ஒருநாள், டி20 இரண்டு அணிகளிலும் கே.எல்.ராகுல் திடீரென சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கான காரணம் தெரியவில்லை.
வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கடைசி 3 ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம்பெற்றுள்ளார். அதே போல் டி20 தொடரில் குல்தீப் யாதவ் இடத்தில் மும்பை லெக் ஸ்பின்னரும் ஐபிஎல் கலக்கல் பவுலருமான மயங்க் மார்க்கண்டே சேர்க்கப்பட்டுள்ளார்.
ரிஷப் பந்த் ஒருநாள் டி20 அணிகள் இரண்டிலும் இடம்பெற்றுள்ளார். தோனி டி20, ஒருநாள் அணிகளிலும் உள்ளார்.
இந்திய டி20 அணி வருமாறு:
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல்,ஷிகர் தவண், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, விஜய் சங்கர், யஜுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், மயங்க் மார்க்கண்டே.
முதல் 2 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி:
விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவண், அம்பாத்தி ராயுடு, கேதார் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா, மொகமது ஷமி, சாஹல், குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ரிஷப் பந்த், சித்தார்த் கவுல், கே.எல்.ராகுல்.
மீதி 3 ஒருநாள் போட்டிகளுக்கான அணி:
கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவண், ராயுடு, ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, புவனேஷ்வர் குமார், சாஹல், குல்தீப் யாதவ், மொகமது ஷமி, விஜய் சங்கர், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த்.