

போலி பயங்கரவாத சதி தொடர்பாக தன் சக பல்கலைக் கழக மாணவரைச் சிக்கவைக்க முயன்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சலான் கவாஜா மீது சிறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பரில் அர்சலான் கவாஜா நீதியின் பாதையை திசைத் திருப்பும் நோக்கத்துடனும் பொய் ஆவணத்தை உருவாக்கியதாகவும் கைது செய்யப்பட்டார். மேலும் தன் ஜாமீன் வாக்குறுதியை மீறி சாட்சியையும் கலைக்கப்பார்த்துள்ளார் அர்சலான் கவாஜா.
இந்நிலையில் சிறையில் அர்சலான் கவாஜாவை சிலர் அடித்து உதைத்துள்ளனர், இதனையடுத்து அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தை அணுக நீதிமன்றம் அதற்கு மறுத்துள்ளது.
5 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் தொகைக்கு அர்சலான் கவாஜாவை விடுவிக்க வேண்டுகோள் வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதி ஜாமீன் மறுத்தார்.
இந்நிலையில் சிறையில் உஸ்மான் கவாஜா சகோதரர் தாக்கப்பட்டது அங்கு பரபரப்பாகியுள்ளது.