மட்டை மூலம் 4 ரன்கள்தான்! 10 ரன்களுக்கு ஆல் அவுட்: ஆஸி.யில் ருசிகரம்

மட்டை மூலம் 4 ரன்கள்தான்! 10 ரன்களுக்கு ஆல் அவுட்: ஆஸி.யில் ருசிகரம்
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவில் நேஷனல் இண்டீஜினியஸ் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரின் பெண்கள் பிரிவு ஆட்டத்தில் தெற்கு ஆஸ்திரேலியா அணி புதிய தாழ்வைச் சந்தித்தது.

நியூசவுத்வேல்ஸ் அணிக்கு எதிரான 2வது சுற்று ஆட்டத்தில் தெற்கு ஆஸ்திரேலிய மகளிர் அணி 10 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, இதில் மட்டையில் பட்டு வந்த ரன்கள் 4 மட்டுமே. 6 ரன்கள் எக்ஸ்ட்ரா வகையில் வந்ததாகும். இந்த 4 ரன்களும் தொடக்க வீரர் ஃபெபி மான்செல் எடுத்தது.

இவரது 4 ரன்களுக்குப் பிறகு தொடர் சைபர்கள் அதன் பிறகு கூடுதல் ரன்கள் 6 என்று விசித்திரமான ஸ்கோர் கார்டு காணக்கிடைத்துள்ளது.

நியூசவுத்வேல்ஸ் பவுலர் ரோக்சான் 2 ஓவர்கள் வீசி 1 மெய்டன் 1 ரன் 5 விக்கெட்டுகள். இன்னொரு பவுலர் நவோமி உட்ஸ் 2 பந்துகளை வீசி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய நியுசவுத்வேல்ஸ் அணி 2.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தேவைப்படும் 11 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in