Published : 21 Feb 2019 03:35 PM
Last Updated : 21 Feb 2019 03:35 PM

அப்ரிடி சாதனை முறியடிப்பு- புதிய மைல்கல்லை எட்டிய கிறிஸ் கெயில்: 9 சுவாரஸ்ய தகவல்கள்

பிரிட்டவுனில் நேற்று இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 12 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடியின் சாதனையை மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் முறியடித்துள்ளார்.

பிரிஜ்டவுனில் இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் 129 பந்துகளில் 135 ரன்கள் சேர்த்தார். இதில் 12 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும். இதில் 12 சிக்ஸர்கள் அடித்தபோது, சர்வதேச அளவில் அதிகசிஸ்கர்கள் அடித்த வீரர் எனும் பெருமையை கெயில் பெற்றார்.

  • சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி 476 சிக்ஸர் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனையை கெயில் நேற்று முறியடித்தார்.  ஒட்டுமொத்தாக அப்ரிடியைக் காட்டிலும் ஒரு சிக்ஸர் அதிகமாக 477 சிக்ஸர்கள் அடித்து அந்த சாதனையை கெயில் முறியடித்தார்.

.ஷாகித் அப்ரிடி தனது 476 சிக்ஸர்களை 524 போட்டிகளில் அடித்தார். ஆனால் கெயில் 477 சிக்ஸர்களை 444 போட்டிகளில் அடித்துள்ளார்.

  • இதுவரை கிறிஸ் கெயில் ஒருநாள் போட்டியில் 276 சிக்ஸர்களும், டி20 போட்டிகளில் 103 சிக்ஸர்களும், டெஸ்ட் போட்டியில் 98 சிக்ஸர்களும் விளாசியுள்ளார்.
  • அதிக சிக்ஸர்கள் அடித்தவரிசையில் அப்ரிடிக்கு அடுத்தார்போல், நியூசிலாந்து வீரர் மெக்கலம்(398), ஜெயசூர்யா(352), ரோஹித் சர்மா(349) தோனி(348) ஆகியோர் உள்ளனர்.

  • கிறிஸ் கெயில் ஒரு அணிக்கு எதிராக 10 சிக்ஸர்கள் அடிப்பது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு, ஜிம்பாப்வே(2015), யுஏஇ(2018) ஆகிய அணிகளுக்கு எதிராக 10 சிக்ஸர்களை கெயில் அடித்துள்ளார்.
  • கெயில் தவிர, 10 சிக்ஸர்கள் அடித்தவர்கள் வரிசையில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ், நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில், இந்திய வீரர் ரோஹித் சர்மா ஆகியோர் உள்ளனர்.
  • ஒரு அணிக்கு எதிராக 100 சிக்ஸர்களை அடித்த முதல்வீரர் கெயில் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக இதுவரை 3 வகையானபோட்டிகளையும் சேர்த்து 100 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 31 ஒருநாள் போட்டிகளில் 57 சிக்ஸர்கள், 11 டி20யில்28 சிக்ஸர்கள், 20 டெஸ்ட் போட்டிகளில் 15 சிக்ஸர்களை கெயில் அடித்துள்ளார்.
  • இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 23 சிக்ஸர்கள் அடித்துள்ளது. ஒரு அணிக்கு எதிராக மற்றொரு அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன் கடந்த 2014ம் ஆண்டு, மே.இ.தீவுகளுக்கு எதிராக நியூசிலாந்து 22 சிக்ஸர்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. அதை இப்போது மே.இ.தீவுகள் முறியடித்தது.
  • கிறிஸ் கெயில் இதுவரை டி20 போட்டிகளில் 103 சிக்ஸர்களும், ஒருநாள் போட்டியில் 276 சிக்ஸர்களும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 98 சிக்ஸர்களும் அடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x