

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் 42 பந்துகளில் 118 ரன்கள் விளாசி சாதனை படைத்தார்.
ஸ்மாஷ் மாஸ்டர் பிளாஸ்டர் ஸ்கூல் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் தீருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளிக்கு ஆடிய அர்ஜுன் டெண்டுல்கர் ஆடிய இந்த அதிரடி ஆட்டத்தினால் அந்தப் பள்ளி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
இந்தப் பள்ளிகள் கிரிக்கெட் தொடரில் சுமார் 102 பள்ளிகள் கலந்து கொண்டன. இந்தத் தொடரின் சிறப்பான வீரர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் பரிசுகளை வழங்கவுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டரில் இந்தச் செய்தியைப் பதிவு செய்துள்ளார்.