Published : 04 Feb 2019 04:58 PM
Last Updated : 04 Feb 2019 04:58 PM

தோனியை துரத்திய சாஹல் : வைரலாகும் வீடியோ

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது போட்டியின் முடிவில் இந்திய வீரர் தோனியை சாஹல் துரத்திக் கொண்டு ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை வெலிங்டன் போட்டியில் இந்திய அணி அபாரமாக  விளையாடி  நியுசிலாந்து அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தித் தொடரை 4-1 என்று கைப்பற்றியது. இந்தப் போட்டியின் முடிவில் இந்திய அணி கோப்பையை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் மைதானத்தில் நேர்காணல் அளித்துக் கொண்டிருந்தனர். அப்போது பந்துவீச்சாளர் சாஹல் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா உட்பட பலரை நேர்காணல் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது சாஹல் இந்திய அணி வீரர் தோனியிடன் மைக்கை எடுத்துக் கொண்டு சென்றார்.

இதனைக் கண்டதும் தோனி என்னை விடுப்பா என்ற தொனியில் மைதானத்திலிருந்து ஒட்டம் பிடித்தார். சாஹல் தோனியை துரத்துக் கொண்டு ஓடினார்.

 இறுதியில் தோனி மைதானத்திலிருந்து வெளியே சென்று விடுவார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது தோனி ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x