Published : 03 Feb 2019 02:36 PM
Last Updated : 03 Feb 2019 02:36 PM

ராஸ் டெய்லர் செய்த தவற்றினால் திணறும் நியூஸிலாந்து

வெலிங்டனில் இந்திய-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு வெற்றி பெற 253 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அணி 176/6 என்று போராடி வருகிறது.

 

ஜேம்ஸ் நீஷம் அதிரடி 44 ரன்களுடன் ஆடி வருகிறார்.

 

இந்நிலையில் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது ராஸ் டெய்லரின் (1) விக்கெட். ஆட்டத்தின் 11வது ஓவரின் 2வது பந்தில் பாண்டியா வீசிய இன்ஸ்விங்கரில் கால்காப்பில் வாங்கி நடுவர் தீர்ப்பில் எல்.பி.ஆகி வெளியேறினார். ஒருமுனையில் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆடிவரும் நிலையில் இந்தக் கூட்டணி நியூஸிலாந்து வெற்றி பெற முக்கியக் கூட்டணியாகும்.

 

ஆனால் பந்து கால்காப்பில் சற்று உயரமாகப் பட்டதாகவே தெரிந்தது. முழங்காலுக்கு மேல் பந்து பட்டதாக ரீப்ளேயில் காட்டியது. இதற்கு நேரடியாக மூன்றாவது நடுவரை ரிவியூ கேட்டிருந்தால் ஒருவேளை அவர் பந்து ஸ்டம்புக்கு மேலாக செல்கிறது என்பதை உறுதி செய்து அவுட்டை மாற்றி நாட் அவுட் என்று கூறியிருக்கலாம்.

 

ஆனால் கேன் வில்லியம்சனிடம் ஆலோசித்த ராஸ் டெய்லர் ரிவியூ செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்து பெவிலியன் திரும்பினார்.

 

ஆனால், ரீப்ளேயில் பந்து ஸ்டம்புக்கு மேல் சென்றதாகவே காட்டப்பட்டது, அது உண்மையில் நாட் அவுட், ஸ்டம்புக்கு மேலாகச் செல்லும் பந்துக்கு அம்பயர்ஸ் கால் என்ற வகைமாதிரி எடுபடாது, பந்தின்லைன் பற்றிய தீர்ப்பில் வேண்டுமானால் அம்பயர்ஸ் கால் எடுபடும், ஆனால் பந்து ஸ்டம்புக்கு மேல் செல்லும் என்றால் அது நாட் அவுட்டாகத்தான் ரிவியூவில் மாறியிருக்கும்.

 

ஆகவே ரிவியூ செய்யாமல் ராஸ் டெய்லர் போனதால் 38/3 என்று கடும் நெருக்கடிக்குள்ளானது நியூஸிலாந்து. சிலவேளைகளில் கிரிக்கெட்டில் சிறுசிறு தவறுகள் பெரிய முடிவை ஏற்படுத்திவிடக்கூடியது என்பதற்கு இந்த ராஸ் டெய்லரின் ரிவியூ செய்யாத முடிவு உதாரணமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x