

துபாய் டென்னிஸ் சாம்பியன் ஷிப் தொடரில் சிமோனா ஹாலப், பெட்ரா விட்டோவா ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறினார்கள்.
மகளிருக்கான துபாய் டூட்டி ப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடை பெற்ற ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீராங்கனையான ருமேனியா வின் சிமோனா ஹாலப் 6-3, 7-5 என்ற நேர் செட்டில் உக்ரைனின் சுரேன்கோவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள செக் குடி யரசின் பெட்ரா விட்டோவா 7-5,1-6,6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியை வீழ்த்தி கால் இறுதி யில் கால்பதித்தார். 5-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 7-5, 4-6, 0-6 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் சு-வேய் ஹெசீயிடம் தோல்வியடைந்தார்.