Published : 13 Feb 2019 07:40 PM
Last Updated : 13 Feb 2019 07:40 PM

மார்டின் கப்தில் சதம், வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரம்: வங்கதேசத்தை  ஊதித் தள்ளிய நியூஸிலாந்து

நேப்பியரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி வங்கதேசத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

 

டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்து 48.5 ஓவர்களில் 232 ரன்களுக்குச் சுருண்டது. ஷாகிப் அல் ஹசன் இல்லாதது வங்கதேச அணியின் பலவீனத்தை அதிகப்படுத்தியது. நியூஸி. தரப்பில் போல்ட், சாண்ட்னர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் ஹென்றி, லாக்கி பெர்கூசன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

இன்னிங்ஸ் தொடக்கமே வங்கதேசத்துக்குச் சரியில்லாமல் அமைந்தது. தமிம் இக்பால் (5), லிட்டன் தாஸ் (1), முஷ்பிகுர் ரஹிம் (5) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க சவுமியா சர்க்கார் எதிர்த்தாக்குதல் இன்னிங்சில் 22 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 30 ரன்கள் எடுத்து ஹென்றி பந்தில் அவரிடமே கேட்ச் கொடுக்க வங்கதேசம் 42/4 என்று ஆனது, பொல்ட், ஹென்றி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

இது 131/7 என்று ஆனது, பிறகு 8வது விக்கெட்டுக்காக 84 ரன்களை மொகம்து மிதுன் (62), மொகமது சைபுதின் (41) இணைந்து வங்கதேச 8வது விக்கெட் சாதனையாக 84 ரன்களைச் சேர்க்க 200 ரன்கள் வந்தது, ஆனால் சாண்ட்னர் இந்தக் கூட்டணியை உடைத்தார்.  மெஹதி ஹசன் மிராஸ் 26 ரன்கள் எடுக்க 232 ரன்கள் எடுத்தது வங்கதேசம்.

 

 

நியூஸிலாந்து இலக்கைத் துரத்திய போது மார்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ் நிதானமாகவே விரட்டினர். தேவையான ரன் விகிதத்தில் இருவரும் 103 ரன்கள் தொடக்கக் கூட்டணி அமைத்தனர். 80 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த நிகோல்ஸ் அப்போது மெஹதி ஹசன் மிராஸிடம் பவுல்டு ஆனார். பிறகு கேப்டன் கேன் வில்லியம்சன் 11 ரன்களில் மஹமுதுல்லா பந்தில் எல்.பி.ஆனார்.

 

ஆனால் ராஸ் டெய்லர், மார்டின் கப்திலுடன் இணைந்து விக்கெட்டை மேலும் இழக்காமல் 44.3 ஓவர்களில் 233/2 என்று எளிய வெற்றியை ஈட்டினர், மார்டின் கப்தில் 116 பந்துகளில் 8 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 117 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ, ராஸ் டெய்லர் 45 நாட் அவுட்.  ஆட்ட நாயகன் மார்டின் கப்தில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x