எவ்வளவு பெரிய இலக்கையும் விரட்டுவோம்: 360 ரன்கள் மகாவிரட்டலையடுத்து மார்தட்டிக்கொள்ளும் இயன் மோர்கன்

எவ்வளவு பெரிய இலக்கையும் விரட்டுவோம்: 360 ரன்கள் மகாவிரட்டலையடுத்து மார்தட்டிக்கொள்ளும் இயன் மோர்கன்
Updated on
1 min read

மே.இ.தீவுகளுக்கு எதிராக அதிரடி மன்னம் கிறிஸ் கெய்லின் அதிரடி சதம் வீணாக 360 ரன்கள் வெற்றி இலக்கை இங்கிலாந்து ஜேசன் ராய், ஜோ ரூட் சதங்களுடன் அனாயசமாக விரட்டியதையடுத்து இங்கிலாந்து கேப்டன்  இயன் மோர்கன் தன் அணியைப் பற்றி மார்தட்டியுள்ளார்.

சதம் அடித்த ஜேசன் ராய்க்கு 4 கேட்ச்களை மே.இ.தீவுகள் தவற விட்டது, ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவுக்கும் ‘லைஃப்’ கிடைத்தது.

“ஆட்டத்தின் பாதியில் நாங்கள் என்ன பேசிக்கொண்டோம் எனில், இதற்கு முன்பாகக் கூட இத்தகைய நிலையில் இருந்திருக்கிறோம் நம்மால் மிகப்பெரிய இலக்குகளை விரட்டி வெற்றி பெற முடியும் என்றே நினைத்தோம்.

மேலும் எங்களிடம் நீண்ட பேட்டிங் வரிசை உள்ளது. இந்தப் போட்டியில் நாங்கள் ஆரம்பித்த விதம் வெற்றிக்கான உத்வேகத்தை பெற்றுத் தந்தது. ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ தனித்துவம்தான்.

ரன் விகிதம் எகிறியதால் ஒரு கட்டத்தில் கூட தோற்று விடுவோம் என்று நாங்கள் நினைக்கவில்லை.

நாங்கள் மிகவும் நிலையாக ரன் விகிதத்தில் சென்று கொண்டிருந்தோம் எந்த அணியின் தொடக்க பவுலர்களையும் நெருக்கும்போது எதிராக ஆடுவது மட்டும் கஷ்டமல்ல, கேப்டன்சி செய்வதும் கடினம்தான். சிறந்த பந்தை பவுண்டரிக்கோ, சிக்சருக்கோ தூக்கி அடிக்கும் போது அது பவுலர்களின் இருதயத்தை சுக்குநூறாக்கும்.

ஜேசன் ராய் இப்படிப்பட்ட ஒரு ஆதிக்க இன்னிங்ஸை ஆடுவது பெரிய இலக்குகளை விரட்டுவதில் ஒரு உத்வேகத்தை கொடுக்கிறது.  ஜோ ரூட்டின் சதத்தை மக்கள் மறந்து விடுவார்கள்... ஆனால் அவர் அதனை பார்ப்பதற்கு மிகவும் எளிது போல் செய்து விட்டார். அவரைப்போன்ற பாறைத்தனமான ஒரு பேட்ஸ்மென் இருப்பது பெரிய பலம்.” இவ்வாறு கூறினார் இயன் மோர்கன்.

இரண்டாவது ஒருநாள் போட்டி பார்படாஸில் வெள்ளியன்று நடைபெறுகிறது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in