

இந்தியாவில் பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகளில் ஆடவிருக்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு டி20 போட்டிகளும் கொண்ட இந்தத் தொடரில் காயம் காரணமாக மிட்செல் ஸ்டார்க் இடம்பெறவில்லை அவருக்குப் பதிலாக கேன் ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல் ஷான் மார்ஷ் அநேகமாக 2வது போட்டியில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது சகோதரர் மிட்செல் மார்ஷ் அணியிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டுள்ளார்.
பேட்ஸ்மென் ஆஷ்டன் டர்னர், டார்சி ஷார்ட் ஆகியோர் அணிக்குத் திரும்ப பவுலர் கூல்ட்டர் நைலும் திரும்பியுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடிய பீட்டர் சிடில் நீக்கப்பட்டுள்ளார், இவருடன் பில்லி ஸ்டான்லேக் நீக்கப்பட்டுள்ளார். பாட்கமின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார் இவர் அணியின் துணைக் கேப்டனாகச் செயல்படுகிறார்.
மிட்செல் ஸ்டார்க்கிற்கு தசையில் கிழிவு இருப்பதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி வருமாறு:
ஏரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், கிளென் மேக்ஸ்வெல், ஆஷ்டன் டர்னர், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி, பாட் கமின்ஸ், நேதன் கூல்ட்டர் நைல், ஜை ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஜேசன் பெஹ்ரெண்டார்ப், நேதன் லயன், ஆடம் ஸாம்ப்பா, டார்சி ஷார்ட்