ரிலையன்ஸ் போனால் என்ன? இன்னொரு ஸ்பான்சர் ரெடி: பாக். கிரிக்கெட் வாரியம்

ரிலையன்ஸ் போனால் என்ன? இன்னொரு ஸ்பான்சர் ரெடி: பாக். கிரிக்கெட் வாரியம்
Updated on
1 min read

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாகப் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஸ்பான்சர் நிதியுதவியை நிறுத்தப்போவதாக ஐஎம்ஜி -ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்தது, இதனையடுத்து வேறொரு ஸ்பான்சரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ‘ரெடி’ செய்துள்ளது.

பாகிஸ்தான் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஐஎம்ஜி- ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிப்பு பங்குதாரராக இருந்து வருகிறது. போட்டிகள் நடப்பது, போட்டி ஒளிபரப்பு, விளம்பரம் என அனைத்தையும் ஐஎம்ஜி - ரிலையன்ஸ் நிறுவனம் ஒருங்கிணைத்து வருகிறது.

மேலும் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒளிபரப்பும் உரிமை மற்றும் நடவடிக்கைகளை ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் சூப்பர் லீக் டி- 20 போட்டிகளுக்கான ஸ்பான்சர், நிதியுதவி அனைத்தையும் நிறுத்துவாக ஐஎம்ஜி- ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்தது. பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளுக்கு ஐஎம்ஜி -ரிலையன்ஸ் நிறுவனம் மிக முக்கியமான ஸ்பான்சராக விளங்கி வருகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று நினைத்த நிலையில் பிளிட்ஸ் அண்ட் ட்ரான்ஸ் குழுமம், ஐஎம்ஜி ரிலையன்ஸ் செய்த லைவ் கவரேஜ் உள்ளிட்ட தயாரிப்பு பணிகளையும் ஒருங்கிணைப்புப் பணிகளையும் மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்லதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஐஎம்ஜி ரிலையன்ஸ் மட்டுமல்ல, டிஸ்போர்ட்ஸ் நிறுவனம் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளை இந்தியாவில் நேரலை செய்வதை ரத்து செய்தது. கிரிக்கெட் கேட் வே இணையதளம் கடந்த 2 ஆண்டுகளாக பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளை ஆன்லைன் கவரேஜ் செய்து வந்தது, புல்வாமாவுக்குப் பிறகு நிறுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in