Published : 28 Feb 2019 12:54 PM
Last Updated : 28 Feb 2019 12:54 PM

இந்த டி20 தொடரை வைத்து ‘பெர்ஃபாமன்ஸ்’ பற்றியெல்லாம் பேச முடியாது: தோல்விக்குப் பிறகு விராட் கோலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ‘உலகக்கோப்பைக்கு முன்பு கடைசி சர்வதேச தொடர்’ என்று அழைக்கப்படும் டி20 தொடரில் இந்திய அணி 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில் விராட் கோலி தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

 

விராட் கோலி கூறியதாவது:

 

ஆஸ்திரேலியா எங்களை அனைத்து புலத்திலும் தோற்கடித்து விட்டது. அந்த அணிதான் வெற்றி பெறத் தகுதியான அணி.  பெரும்பாலான மைதானங்களில் 190 ரன்கள் என்பது கடினமான இலக்குதான்.

 

ஆனால் இத்தகைய பனிப்பொழிவிலும், கிளென் மேக்ஸ்வெல் ஆடியது போன்ற இன்னிங்ஸ் முன்னாலும் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை.  ஒவ்வொரு அணியுமே வெற்றி பெறத்தான் பாடுபடும். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும், ஆனால் பனிப்பொழிவு காரணமாக நான் பவுலர்கள் மீது அதிகம் குறைகூற விரும்பவில்லை.

 

மேலும், இத்தகைய குறுகிய டி20 தொடரை வைத்து பெர்பாமன்ஸ் பற்றி தொகுத்துக் கூற முடியாது. 

 

அனைவருக்கும் ஆட்ட நேரம் என்ற அவகாசத்தை அளித்து அதில் அவர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பார்த்து வருகிறோம். நெருக்கடி தருணங்களில் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைப் பார்த்து வருகிறோம்.

 

ஒருநாள் தொடர் வருகிறது அதில் இன்னும் சில பரிசோதனைகளை மேற்கொள்வோம். வீரர்கள்தான் திறமைகளை வெளிப்படுத்தி அணியை வெற்றி முடிவுக்கு இட்டுச் செல்ல வேண்டும்.

 

பெங்களூரு பிட்ச் தன் சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளது, பந்துகளின் லெந்த்தை நம்பி ஆடலாம், அதைத்தான் இன்று செய்தேன் ஆனால் அணி தோல்வியடைந்ததால் அந்த இன்னிங்ஸ் பற்றி பெரிதாக நான் எடுத்துக் கொள்ளவில்லை.

 

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x