Published : 27 Feb 2019 10:36 AM
Last Updated : 27 Feb 2019 10:36 AM

கிரிக்கெட் மீதுள்ள நேயத்தால் 2 ஆண்டுகள் தடையை ஏற்று கொள்கிறேன்: சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய சனத் ஜெயசூர்யா உருக்கம்

கடந்த அக்டோபரில் சனத் ஜெயசூர்யா மீது ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பினருக்கு சந்தேகம் எழ அவரது மொபைல் போனைக் கேட்டுள்ளனர், ஆனால் ஜெயசூர்யா அதைத் தர மறுத்தார், இதனையடுத்து விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஜெயசூர்யாவுக்கு ஐசிசி 2 ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

 

இதனையடுத்து தான் எந்தவித ஊழல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை, ஆனால் கிரிக்கெட் மீதான நேயத்திற்காக 2 ஆண்டுகள் தடையை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன்.

 

ஐசிசி ஊழல் தடுப்பு விதிமுறைகளின் படி எந்த ஒரு வீரர், பயிற்சியாளர், சந்தேகம் எழும் எந்த ஒரு கிரிக்கெட் தொடர்பான நிர்வாகி, நபர்களிடத்தில் தொலைபேசி அழைப்பு விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், சொத்து விவரங்கள் ஆகியவற்றை கேட்டால் உடனடியாகக் கொடுக்க வேண்டும், மறுத்தால் ஐசிசி நடவடிக்கை பாயும்.  மேலும் விசாரணையை தாமதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுதல், ஆதாரங்களை அழிக்கும் செயல்களில் ஈடுபடுதல் ஆகிய குற்றச்சாட்டுகளும் சனத் ஜெயசூர்யா மீது வைக்கப்பட்டது.

 

அந்த வகையில்தான் ஜெயசூர்யா மீது தற்போது குற்றம்சாட்டப்பட்டு தடை உறுதி செய்யப்பட்டது.

 

இதனையடுத்து ஜெயசூர்யா தெரிவிக்கும் போது,

 

“நான் அனைத்து தகவல்களையும் அளித்தேன். ஆனாலும் எந்த வித ஊழல் குற்றச்சாட்டுகளோ, உள்தகவலைப் பரிமாறியதாகவோ எந்த வித குற்றச்சாட்டுகளும் என்  மீது இல்லை. குற்றச்சாட்டுகளை ஏன் ஏற்றுக் கொண்டேன் என்றால் கிரிக்கெட் ஆட்டத்தின் நேர்மையைக் காக்கவே.  என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் உயர்ந்தபட்ச நேர்மையைக் கடைபிடித்து ஆடிவந்துள்ளேன். நான் எப்போதும் நாட்டுக்குத்தான் முன்னுரிமை அளிக்கிறேன். எனது இந்த தன்மைக்கு கிரிக்கெட்டை ரசிக்கும் ரசிகர்களே சாட்சி” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x