

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அதிரடி 360 டிகிரி வீரர் என்று அழைக்கப்படும் டிவில்லியர்ஸ் போஸ்டருக்கு பெங்களூருவைச் சேர்ந்த ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஏ.பி.டிவில்லியர்ஸ் தனியார் டி20 கிரிக்கெட்டில் மட்டும் ஆடவுள்ளதாகத் தெரிவித்த போது ஐபிஎல் கிரிக்கெட் தன் மனதுக்கு அந்தரங்கமானது என்றும் இந்தத் தொடரை தன்னால் ஒரு போதும் புறக்கணிக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரது பிறந்த்நாளை முன்னிட்டு நேற்று தன் பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் ஏ.பி.டிவில்லியர்ஸ், மற்றும் இந்திய வீரர் விராட் கோலி ஆகியோர் சேர்ந்திருக்கும் போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
பாலாபிஷேகம் செய்த இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் போட்டித்தொடரை ஒருமுறை கூட ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதில்லை. வரும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு ரசிகர்களின் இந்த தீரா தாகத்தையும் விராட் கோலி படை தணிக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.