

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் போது காயமடைந்த வங்காள விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, காயத்திலிருந்து மீண்டு தற்போது சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் மேற்கு வங்க அணிக்காக ஆடுகிறார்.
கட்டாக்கில் பிப்ரவரி 21ம் தேதி சையத் முஷ்டாக் அலி டி20 உள்நாட்டுப் போட்டித் தொடர் திரும்புகிறது.
கடந்த ஐபிஎல் தொடரில் காயமடைந்ததால் அவர் இந்திய அணியின் இடமும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஏனெனி ரவிசாஸ்திரி, விராட் கோலி அடங்கிய இந்திய அணி நிர்வாகம் தற்போது டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பந்த் அவசியம் என்று பேசி வருகின்றனர்.
ஆகவே அவர் மீண்டும் இந்திய அணியில் நுழைவது கடினம், ஒருவேளை டி20 உள்நாட்டு போட்டிகளில் அவர் பிரமாதமாக ஆடிவிட்டால், தாதா கங்குலியின் பரிந்துரையின்பேரில் டி20-யிலும் தினேஷ் கார்த்திக் இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.
மேற்கு வங்க அணியின் பயிற்சியாளர் அருண் லால்.
வங்காள டி20 அணி வருமாறு:
மனோஜ் திவாரி (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன் (துணை கேப்டன்), விருத்திமான் சஹா (வி.கீ), அசோக் திண்டா, ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, விவேக் சிங், ரிட்டிக் சாட்டர்ஜி, ரிட்விக் ராய் சவுத்ரி, ஷாபாஸ் அகமட், பிரதிப்தா பிராம்னிக், கணிஷ்க் சேத், சயான் கோஷ், இஷான் போரெல், பிரயாஸ் ரே பர்மன், அயன் பட்டார்யா