

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் ஜூனியர் 25 மீ. ஸ்டான்டர்ட் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் இளம் துப்பாக்கி சுடுதல் வீரரான பிரதீப் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
ஸ்பெயினின் கிரனாடாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் பிரதீப் 561 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்தார். அமெரிக்காவின் அலெக்சாண்டர் சிக்கோவ் 563 புள்ளிகளுடன் முதலிடத்தையும், இத்தாலியின் டேரியோ டி மார்ட்டினோ 2-வது இடத்தையும் பிடித்தனர். உலக துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள 2-வது பதக்கம் இது.