Published : 04 Feb 2019 08:38 PM
Last Updated : 04 Feb 2019 08:38 PM

3 நாளில் டெஸ்ட் போட்டியே முடிந்து விட்டது, மூளைகெட்டத் தனமான தடை: மே.இ. கேப்டன் ஹோல்டர் மீதான ஐசிசி தடை மீது ஷேன் வார்ன் பாய்ச்சல்

மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்தை டெஸ்ட் தொடரில் 2-0 என்று வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றதையடுத்து மே.இ.தீவுகள் பற்றியும் கேப்டன் ஜேசன் ஹோல்டரின் சாதனைகள் பற்றியும் உலகமே விதந்தோதி வரும் நிலையில் குறித்த நேரத்தில் ஓவர்களை வீசவில்லை என்பதற்காக அவரை அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

 

இது முன்னாள் வீரர்களின் கோபாவேசத்தைக் கிளப்பியுள்ளது, இது என்ன மூளைகெட்டத் தனம் என்று சாடியுள்ளனர்.

 

ஆஸ்திரேலிய லெஜண்ட் ஷேன் வார்ன் தன் ட்விட்டரில், “டெஸ்ட் போட்டி 3 நாட்கள்தான் நடைபெற்றுள்ளது. ஜேசன் ஹோல்டர் நீங்கள் மேல்முறையீடு செய்யுங்கள். என்ன ஒரு மூளைகெட்டத் தனமான முடிவு, இங்கு புத்தி எங்கு போயிற்று? ஆச்சரியகரமான தொடர் வெற்றிக்குப் பாராட்டு குவிந்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டுக்கு வலுவான மே.இ.தீவுகள் அணி தேவைப்படுகிறது. அதற்கு இது தொடக்கமாக அமையும் என்று நம்புகிறோம்” என்று சாடியுள்ளார்.

 

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான் தன் சமூகவலைத்தளப் பதிவில், “246 ஓவர்களில் டெஸ்ட் போட்டியே முடிந்து விட்டது. அதாவது 2.6 நாளில் முடிந்துள்ளது. எதிரணியினரை அடித்து நொறுக்கியுள்ளது இங்கிலாந்து, ஆனாலும் கேப்டன் ஹோல்டருக்கு ஸ்லோ ஓவர் ரேட் என்று தடை, ஹோல்டருக்கு இது துரதிர்ஷ்டமே. ஆட்டம் தன்னைத்தானே இங்கு கைவிட்டு விட்டது” என்று சாடியுள்ளனர்.

 

சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் ஜேசன் ஹோல்டர் தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x