அதிரடி ஆல்ரவுண்டரை அழைத்தது நியூஸிலாந்து அணி

அதிரடி ஆல்ரவுண்டரை அழைத்தது நியூஸிலாந்து அணி
Updated on
1 min read

ஏற்கெனவே இந்தியாவுடனான ஒருநாள் தொடரை 3-0 என்று இழந்த நியூஸிலாந்து அணி கடைசி 2 போட்டிகளுக்காக இரண்டு வீரர்களை அணிக்குள் அழைத்துள்ளது.

மோசமாக வீசி வரும் டக்கி பிரேஸ்வெலுக்குப் பதிலாக அதிரடி ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் அணியிக் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் டாட் ஆஸ்ட்ல் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

காயத்தினால் அவதிப்பட்டு வந்த அதிரடி ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் மற்றும் காயத்தினால் ஆட முடியாமல் போன லெக்ஸ்பின்னர் டாட் ஆஸ்ட்ல் ஆகியோர் அணிக்குத் திரும்பியுள்ளனர்.

ஜேம்ஸ் நீஷம் இதுவரை 44 ஒருநாள் போட்டிகளில் ஆடி 934 ரன்களை 102 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். பவுலிங்கில் 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடைசியாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜேம்ஸ் நீஷம் 47 நாட் அவுட், 64 என்று அதிரடி இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார்.

கடைசி 2 போட்டிகளுக்கான நியூஸிலாந்து அணி வருமாறு:

கேன் வில்லியம்சன், டாட் ஆஸ்ட்ல், ட்ரெண்ட் போல்ட், கொலின் டி கிராண்ட் ஹோம், லாக்கி பெர்கூசன், மார்டின் கப்தில், மேட் ஹென்றி, டாம் லேதம், கொலின் மன்ரோ, ஜேம்ஸ் நீஷம், ஹென்றி நிகோல்ஸ், மிட்செல் சாண்ட்னர், டிம் சவுதி, ராஸ் டெய்லர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in