

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளர் ராமாகந்த் அச்ரேக்கர் புதன்கிழமை காலமானார்.
வயது முதிர்வு காரணமாக மத்திய மும்பையிலுள்ள தாதர் பகுதியில் உள்ள குடியிருப்பில் பயிற்சியாளர் ராமாகந்த் அச்ரேக்கர் மரணம் அடைந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். அவருக்கு வயது 87.
இந்த நிலையில் அவரது உடல் சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இங்குதான் அச்ரேக்கர் சச்சின் உட்பட பல்வேறு கிரிக்கெட் வீர்ரகளுக்குப் பயிற்சி அளித்தார்.
இறுதி ஊர்வலத்தில் வினோத் காம்ப்ளி, சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும் இறுதி ஊர்வலத்தில் அச்ரேக்கர் உடலை சுமந்தபடி சென்று குருவுக்கான இறுதிக் கடமையை நிறைவேற்றினார் சச்சின்.
அச்ரேக்கரின் இறுதி ஊவலத்தில் மகாராஷ்டிரா நவநிர்மான் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மறைந்த அச்ரேக்கர் துரோணாச்சாரியா விருது மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளையும் பெற்றுள்ளார்.