

சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒரு ரன் எடுத்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களைக் எட்டிய வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.
முன்னாள் இந்தியக்கேப்டன் தோனியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் ஒட்டுமொத்த ரன்கள் அடிப்படையில் பார்த்தால் அவர் 10 ஆயிரத்து 173 ரன்கள் சேர்த்துள்ளார். ஆனால், இதில் 174 ரன்கள் என்பது ஆப்பிரிக்கா லெவன் அணிக்கு எதிராக நடந்த போட்டியின்போது ஆசிய லெவன் அணியில் தோனி அடித்த ஸ்கோர். ஆதலால் இதை தோனியின் தனிப்பட்ட சர்வதேச ஸ்கோராக கருத முடியாது.
ஆசியக்கோப்பைப் போட்டியில் இருந்து தோனி எப்படியாவது 174 ரன்களை எட்டி ஒருநாள்போட்டியில் 10 ஆயிரம் ரன்களை எட்டிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆசியக்கோப்பைப் போட்டியில் தோனியின் பேட்டிங் மிகமோசமாக அமைந்திருந்தது. அதிலும் போதுமான அளவு ரன்கள் சேர்க்க முடியவில்லை.
மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் தோனி அந்த சாதனையைச் செய்வார் என எதிர்க்கப்பட்டது. முதல் இரு போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை, 3-வது, 4-வது போட்டியில் 7,23 ரன்னில் ஆட்டமிழந்து தோனி ஏமாற்றம் அளித்தார். ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை அடைவதற்கு தோனிக்கு ஒரு ரன் குறைவாக இருந்தது.
9 ஆயிரத்து 999 ரன்களில் இருக்கும் தோனி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த முதலாவது போட்டியில் எட்டினார்.
தோனி ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை எட்டினால், சர்வதேச அளவில் 13-வது வீரர் எனும் பெருமையை பெற்றார். இந்திய அளவில் 10 ஆயிரம் ரன்களை எட்டிய 5-வது வீரர் எனும் பெருமையையும் தோனி பெற்றார். இதற்கு முன் சச்சின், கங்குலி, டிராவிட், கோலி ஆகியோர் மட்டுமே 10 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.