Published : 09 Jan 2019 08:40 PM
Last Updated : 09 Jan 2019 08:40 PM

35/3... இதே 35 ரன்களுக்கு ஆல் அவுட்: ரஞ்சி டிராபியில் மத்திய பிரதேசம் பரிதாப தோல்வி

இந்தூரில் நடைபெற்ற ரஞ்சி டிராபி ‘எலைட்’ பி- பிரிவு ஆட்டத்தில் ஆந்திர அணிக்கு எதிராக மத்திய பிரதேச அணி ரன்னே எடுக்காமல் 6 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுதோல்வி அடைந்துள்ளது.

 

ஆந்திர அணி முதல் இன்னிங்சில் 132 ரன்களையும் 2வது இன்னிங்சில் 301 ரன்களையும் எடுக்க, மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்சில் 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

 

இந்நிலையில்  மத்திய பிரதேசத்துக்கு வெற்றி இலக்கு 343 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது.  இந்நிலையில் 3ம் நாளான இன்று 35/3 என்று இருந்த மத்திய பிரதேசம் 6 விக்கெட்டுகளை ஒரு ரன் கூட எடுக்காமல் 35 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமாக ஆல் அவுட் ஆகி படுதோல்வி அடைந்தது. ஒரு பேட்ஸ்மென் காயம் காரணமாக இறங்கவில்லை, ஆகவே டக்கிற்கு 6 விக்கெட்டுகள் பறிபோனது. ஸ்கோர்கார்டின் படி 7 விக்கெட்டுகள் ரன் எதுவும் எடுக்காமலேயே விழுந்துள்ளது.

 

இதனால் காலிறுதிப் போட்டியில் ம.பி. தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விட்டது. லீக் மட்டத்தில் 3 வெற்றிகளை பெற்றது மத்திய பிரதேச அணி. ஆனால் பிட்ச் பவுலருக்குச் சாதகமாக இருந்தது. ஆந்திரா வேகப்பந்து பவுலர் கேவி. சசிகாந்த் 18 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும் இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் டிபி.விஜயகுமார் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

மொத்தமே 52.4 ஓவர்கள்தான் இரண்டு இன்னிங்ஸ்களிலும் தாக்குப் பிடித்தது மத்தியப் பிரதேசம்.  2வது இன்னிங்சில் ம.பி. அணியின் தொடக்க வீரர் கவுரவ் யாதவ் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x