

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நிறுத்த வேண்டும். அது கிரிக்கெட்டின் நீண்ட கால நலனுக்கு எதிரானதாக உருவெடுத்திருக்கிறது. ஐபிஎல் இல்லாமல் இருந்தால் கிரிக்கெட் நன்றாக இருக்கும் என முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் இயான் போத்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “ஐபிஎல் போட்டியால் நான் மிகுந்த கவலையடைந்துள்ளேன். உலக கிரிக்கெட்டுக்கான முன்னுரிமையையே ஐபிஎல் மாற்றிவிட்டதால் அது தேவையில்லை என நினைக்கிறேன். அதற்கு வீரர்களும், நிர்வாகிகளும் அடிமையாகிவிட்டனர்” என்றார்.