Last Updated : 20 Jan, 2019 05:12 PM

 

Published : 20 Jan 2019 05:12 PM
Last Updated : 20 Jan 2019 05:12 PM

இலக்கு 230 ஆக இருந்ததால் இப்படி ஆடினார், பெரிய இலக்காக இருந்தால் வேறுமாதிரி ஆடியிருப்பார்: தோனிக்காக வாதாடும் மைக்கேல் கிளார்க்

ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் வென்று டி20 தொடரில் 1-1 என்று சமன் செய்து ஒரு வெற்றிகரமான தொடராக மாற்றியதில் விராட் கோலியின் பங்கை பெரிதும் பாராட்டிய மைக்கேல் கிளார்க், ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரையில் கிரேட்டஸ்ட் பேட்ஸ்மேன் கோலிதான் என்று பீடத்தில் கொண்டு வைத்தார்.

 

விராட் கோலி பற்றி...

 

என்னைப் பொறுத்தமட்டில் ஒருநாள் கிரிக்கெட்டை ஆடியதில் விராட் கோலிதான் இதுவரை கிரேட்டஸ்ட் பேட்ஸ்மேன்.  இந்தியாவுக்காக அவர் சாதனைகளைப் பார்க்கும் போது எனக்கு இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

 

தன் நாட்டுக்காக போட்டிகளில் வெற்றி பெறும் அவரது உணர்வை நாம் மதிக்க வேண்டும். ஆம் அவர் ஆக்ரோஷமானவர்தான், ஆனால் அவரைப்போன்ற அர்ப்பணிப்புணர்வை நாம் கேள்விக்கேட்க முடியாது. எத்தனை சாதனைகளை நிகழ்த்திவிட்டார். அவர் கிரேட்டஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் வீரர்தான்.

 

தோனி பற்றி...

 

எம்.எஸ் (தோனி)-க்கு எந்தச் சூழ்நிலையை எப்படிக் கையாள வேண்டும் என்பது தெரியும். 300 ஒருநாள் போட்டிகளுக்கு மேல் ஆடியுள்ளார், ஆகவே அவருக்குத் தெரியும்.

 

இலக்கு பெரியதாக இருந்தால் அவர் நிச்சயம் வேறு மாதிரி ஆடியிருப்பார், 230 என்பதால் இப்படி ஆடி வெற்றியை உறுதி செய்தார். இலக்கு பெரிதாக இருக்கும் போது வேறு வகையில் திட்டமிட்டு ஆடியிருப்பார்.

 

2வது போட்டியில் அடிலெய்டில் அவரது அணுகுமுறையைக் கவனியுங்கள், 3வது மெல்போர்ன் போட்டியிலும் கவனியுங்கள், இரண்டும் வேறு அணுகுமுறைகளே.

 

4,5, 6 என்று அல்ல எந்த நிலையிலும் தோனியைக் களமிறக்கலாம். விராட் அவரை சரியாகப் பயன்படுத்துவார் என்றே நான் கருதுகிறேன்.

 

இவ்வாறு கூறினார் மைக்கேல் கிளார்க்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x