Published : 18 Jan 2019 02:14 PM
Last Updated : 18 Jan 2019 02:14 PM

சாஹலின் ஆர்ப்பரிப்பான 6 விக்கெட்: சுவாரஸ்யமான 6 தகவல்கள்

மெல்போர்னில் நடந்துவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் யஜூவேந்திர சாஹல் 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாகப் பந்துவீசிய 2-வது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியாவில் வீழ்த்தியதன் மூலம் சாஹல் குறித்த 6 முக்கியமான சுவாரஸ்யமான விஷயங்கள்.

1.  டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் ஒரே போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் யஜுவேந்திர சாஹல் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன் இலங்கை சுழற்பந்துவீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் பெற்றிருந்தார்.

2. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாகப் பந்துவீசிய 2-வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை சாஹல் பெற்றார். இதற்கு முன் கடந்த 2007-ம் ஆண்டில் முரளி கார்த்திக் 27 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும், 2004-ம் ஆண்டில் அகர்கர் 42 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர்.

 

3.  ஆஸ்திரேலயாவில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 8-வது சுழற்பந்துவீச்சாளர் சாஹல் ஆவார். இதற்கு முன் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்: அப்துல் காதர் (பாக்.1984), ரவி சாஸ்திரி (1991), ஷேன் வார்ன் (1996), சாக்லின் முஷ்டாக் (1996), ஜிம்மி ஆடம்ஸ் (தெ.ஆப் 1996), இம்ரான் தாஹிர் (2015).

4.   ரவி சாஸ்திரி கடந்த 19991-ம் ஆண்டு பெர்த் மைதானத்தில் 5 விக்கெட் வீழ்த்திய நிலையில், அவர் பயிற்சியின் கீழ் சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், அதற்கு மேல் எடுத்தவர் சாஹல் மட்டுமே.

5.   ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய 7-வது இந்திய பந்துவீச்சாளர் சாஹல்.

6.  கடந்த 2014-ம் ஆண்டில் ஸ்டூவர்ட் பின்னி 4 ரன்ளுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இது தவிர அனில் கும்ப்ளே, ஆஷிஸ் நெஹ்ரா, குல்தீப் யாதவ், முரளி கார்த்திக், அஜித் அகர்கர் ஆகியோர் வீழ்த்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x