Published : 20 Jan 2019 02:32 PM
Last Updated : 20 Jan 2019 02:32 PM

மிட்செல் ஜான்சன் அறிவித்த உலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணி: கேப்டன் தேர்வில் ஆச்சரியம்

தடுமாறி வரும் ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பைக்கு எந்த மாதிரி அணியைத் தேர்வு செய்யும் என்ற கணிப்புகளுக்கும் ஹேஷ்யங்களுக்கும் இடையே மிட்செல் ஜான்சன் தன் உலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளார், ஆனால் அந்த அணிக்கு அவர் யார் கேப்டனாக இருக்க வேண்டும் என்று தேர்வு செய்தது பலரது புருவத்தை உயர்த்தியுள்ளது.

 

ஸ்டீவ் ஸ்மித், வார்னர் மீண்டும் அணிக்குத் திரும்பி விடுவார்கள் என்று ஜான்சன் அவர்களை அணியில் சேர்த்தாலும் அணிக்குக் கேப்டனாக கிளென் மேக்ஸ்வெலைத் தேர்வு செய்திருப்பது பலருக்கும் கடும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆனால் ஜான்சனின் இந்த அணியில் தற்போதைய டெஸ்ட் துணைக்கேப்டன் ஜோஷ் ஹேசில்வுட் இல்லை என்பது பெரிய ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. அன்று கிளென் மேக்ஸ்வெல் தோனிக்கு எளிதான கேட்சை விட்டது முதல் அவர் மீது ஆஸி.ரசிகர்களுக்கு கடும் கோபம் உள்ள நிலையில் அவரை உலகக்கோப்பை போன்ற பெரிய நிகழ்வுக்கு கேப்டனாக ஜான்சன் எப்படித் தேர்வு செய்தார்? என்று ஆஸி.ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.

 

மிட்செல் ஜான்சனின் ஆஸ்திரேலிய உலகக்கோப்பை அணி:

 

கிளென் மேக்ஸ்வெல் (கேப்டன்), கவாஜா (துணைக் கேப்டன்), பிஞ்ச், வார்னர், டார்சி ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், மார்கஸ் ஸ்டாய்னிஸ், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் (விக்கெட் கீப்பர்), பாட் கமின்ஸ், நேதன் கூல்ட்டர் நைல், மிட்செல் ஸ்டார்க், ஜை ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை, ஆடம் ஸாம்ப்பா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x