எங்கள் நண்பர்களுடன் கூட நாங்கள் இப்படிப் பேச மாட்டோம்: பாண்டியா, ராகுல் மீது ஹர்பஜன் சிங் கடும் காட்டம்

எங்கள் நண்பர்களுடன் கூட நாங்கள் இப்படிப் பேச மாட்டோம்: பாண்டியா, ராகுல் மீது ஹர்பஜன் சிங் கடும் காட்டம்
Updated on
1 min read

காஃப் வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாண்டியா, ராகுல் ஆகியோர் பேசிய விஷயங்கள் குறித்து ஹர்பஜன் சிங் கடுமையாக இருவரையும் சாடியுள்ளார்.

ராகுலை விட மிகவும் தத்துப்பித்தென்று பேசிய பாண்டியா மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன, பிசிசிஐ இருவரையும் தடை செய்ய பரிசீலித்து வருகிறது, இதனால் முதல் ஒருநாள் போட்டியில் நாளை ஆஸி.க்கு எதிராக ஆடும் வாய்ப்பை இருவரும் இழந்தனர்.

இந்நிலையில் இந்தியா டுடேவுக்குப் பேசிய ஹர்பஜன் சிங், “இத்தகைய விஷயங்களைப் பற்றி நாங்கள் நண்பர்களுடன் கூட பேச மாட்டோம், ஆனால் இவர்களோ பலரும் பார்க்கும் தொலைக்காட்சியில் இப்படிப் பேசியுள்ளனர்.

இப்போது மக்கள் என்ன நினைப்பார்கள், ஹர்பஜன் இப்படித்தானோ, அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர் இப்படித்தானோ என்றுதானே...

பாண்டியா அணிக்குள் வந்து எத்தனை நாட்கள் ஆகின்றன? அவர் எப்படி அணிக் கலாச்சாரம் பற்றியெல்லாம் பேச முடியும். தடை செய்தது சரிதான். பிசிசிஐ மிகச்சரியான விஷயத்தைச் செய்துள்ளது.  இனியும் இப்படித்தான் பிசிசிஐ கறாராக இருக்க வேண்டும். இந்தத் தடை எதிர்பார்த்ததுதான், எனக்கு ஒரு ஆச்சரியமும் இல்லை.

என்று ஹர்பஜன் சிங் பொறிந்து தள்ளினார்.

ஹர்திக் பாண்டியா தனக்கும் பெண்களுக்குமான உறவுகள் பற்றி வெளிப்படையாகக் கூறியதோடு தன் பெற்றோருக்கும் இது தெரியும் என்றும் பேசினார், நிகழ்ச்சியை நடத்திய கரண் ஜோஹர், ‘சக வீரர்களின் அறைகளிலும் கூடவா’ என்று கேட்டுள்ளார், இதற்கும் பாண்டியா, ராகுல் இருவரும் ஆமோதிப்பாக பதில் அளித்துள்ளனர். இதைத்தான் ஹர்பஜன் சிங், ‘இவர் எத்தனை நாட்களாக அணியில் உள்ளார் அணிப் பண்பாடு பற்றியெல்லாம் இவர் எப்படி பேச முடியும்’ என்று சாடியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in