Published : 11 Jan 2019 04:32 PM
Last Updated : 11 Jan 2019 04:32 PM

‘அப்படி நடந்தது என்று நீங்கள் கூறுகிறீர்கள்.., நடந்ததா? என்று நான் கேட்கிறேன்’: ஜஸ்டின் லாங்கர் எரிச்சல்

ஸ்மித், வார்னர், பேங்கிராப்ட் என்ன நேரத்தில் பால் டேம்பரிங் செய்தார்களோ தெரியவில்லை, ஆஸ்திரேலிய அணிக்கு அதிலிருந்தே நேரம் மோசமாகப் போய்விட்டது. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஜஸ்டின் லாங்கர், கிளென் மேக்ஸ்வெல் பற்றிய கேள்வியில் எரிச்சலடைந்தது நடந்தது.

 

கிளென் மேக்ஸ்வெலைச் சுற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரங்களில் பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன, அவருக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை என்று ஒரு தரப்பும், அவர் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்று இன்னொரு தரப்பும் கூற, உள்நாட்டு கிரிக்கெட்டில் நிறைய சதங்களை அடி என்று அவரிடம் லாங்கர் கூற... இடையில் கிளென் மேக்ஸ்வெல் தன்னை டெஸ்ட் அணியில் தேர்வு செய்யாதது குறித்து வருந்தியது என்று அதிரடி ஹிட்டர் மேக்ஸ்வெலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடிகளை வழங்கி வருகிறது.

 

இந்நிலையில், இங்கிலாந்து கவுண்ட்டியில் ஆட வேண்டாம், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்து என்று மேக்ஸ்வெலுக்கு அறிவுறுத்தப்பட்டது குறித்து தனக்குத் தெரியாது என்று அணியின் தேசிய தேர்வுக்குழு தலைவர் ட்ரவர் ஹான்ஸ் கையை விரித்தார்.

 

கவுண்ட்டி கிரிக்கெட்டுக்கு முன்னதாக ஓய்வு எடுக்குமாறு மேக்ஸ்வெல் அறிவுறுத்தப்பட்டது, லாங்கர் பயிற்சியாளராவதற்கு முன்பாக.

 

இது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் ஜஸ்டின் லாங்கர், “மேக்ஸ்வெல் விவகாரத்தில் இது நடந்ததென்று நீங்கள் நிச்சயமாகக் கருதுகிறீர்களா? நான் கேட்கிறேன்” என்றார். இப்படியே போய்க்கொண்டிருக்க லாங்கர் எரிச்சலடைந்து, “நீங்கள் என்னிடம் அப்படி நடந்ததென்று சொல்கிறீர்கள், ஆனால் நான் கேட்கிறேன் இப்படி நடந்ததா என்று” இதையே மீண்டுமொருமுறை கூறினார் லாங்கர்.  “எனக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது. இவையெல்லாம் பொறுப்பற்ற ரகசிய முணுமுணுப்புகள்” என்றார்.

 

நானும், தேர்வுக்குழுவும் கிளென் மேக்ஸ்வெல் மீண்டும் டெஸ்ட் அணிக்குள் வர என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாகக் கூறிவிட்டோம். வெள்ளைப்பந்தில் அவர் மிகச்சிறந்தவர் என்று நிரூபித்து விட்டார். கிரிக்கெட் அல்லாத காரணங்களுக்காக அவரைத் தவிர்க்கவில்லை ... போதுமா? இவையெல்லாம் வெறும் சப்தமே, கிளென்னுக்குத் தெரியும் அவர் என்ன செய்ய வேண்டுமென்று.” என்று கூறிய லாங்கர் பிறகு எரிச்சலடைந்ததற்காக மன்னிப்புக் கேட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x