Published : 02 Jan 2019 09:01 AM
Last Updated : 02 Jan 2019 09:01 AM

தேசிய ரக்பி போட்டியில் அரசு பள்ளி மாணவிகள் அசத்தல்

இந்திய பள்ளிகள் விளையாட்டு சம்மேளனம் (எஸ்ஜிஎப்ஐ) சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு தோறும் விளையாட்டுப் போட்டி கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக் கான ரக்பி போட்டி சமீபத்தில் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடை பெற்றது.

நாடு முழுவதிலும் இருந்து 20-க்கும் அதிகமான அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த குழுக்கள் கலந்து கொண்ட இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, மகாராஷ்டிராவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

பட்டம் வென்ற தமிழக அணியில் சோழிங்கநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி தமிழ் மொழி, துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் உள்ளிட்ட15 பேர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் அனைவருக்கும் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர் சக்திவேல் முருகன் கூறும் போது, ‘‘இந்த மாணவிகள் சிறப் பாக செயல்பட்டு நமது மாநிலத் துக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதற்கு பகுதி நேர விளையாட்டு ஆசிரியர் குமார், தலைமை ஆசிரியை ஹமிதா பானு வழிகாட்டி யாக இருந்தனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x