

'காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு கே. எல். ராகுலும், ஹர்திக் பாண்டியாவும் சச்சினை விட விராட் கோலியை தேர்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகினர்.
’காபி வித் கரண்’ நிகழ்ச்சி பாலிவுட் இயக்குனர் கரண் ஜோக்கர் தொகுப்பாளராக தொகுத்து வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரை பிரபலங்கள், கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் , இந்த நிகழ்ச்சியின் நேற்றைய ஒலிப்பரப்பில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியாவும், கே.எல். ராகுலும் கலந்துக் கொண்ட நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
அதில் Rapid fire (கேள்வி பதில் ) -சுற்றில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் யார் என கேட்கப்பட்டது, இதற்கு சிறிது தயங்காமல் கே.எல். ராகுலும், ஹர்திக் பாண்டியாவும் கோலியின் பெயரை குறிப்பிடட்டனர்.
இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில், சச்சினை விட கோளி சிறந்த பேட்ஸ்மேன்னா? என்று இருவரையும் விமர்சிக்க தொடங்கினர்.
அவற்றில் சில
சந்தன்
இப்போதுதான் புரிகிறது ஹர்திக் பாண்டியாவும், கே. எல் ராகுலும் ஏன் ரன் அடிக்க திணறுகிறார்கள் என்று..