டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங்கை காலி செய்த பவுலர் தெ.ஆ. ஒருநாள் அணியில்: ஸ்டெய்ன், டி காக் இல்லை

டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங்கை காலி செய்த பவுலர் தெ.ஆ. ஒருநாள் அணியில்: ஸ்டெய்ன், டி காக் இல்லை
Updated on
1 min read

வரும் 19-ம் தேதி போர்ட் எலிசபெத் மைதானத்தில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.  மொத்தம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட பெரிய தொடரில் முதல் 2 போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முதல் 2 ஒருநாள் போட்டிகளுக்கு டேல் ஸ்டெய்ன், அதிரடி வீரர் குவிண்டன் டி காக் இடம்பெறவில்லை. இவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆனால் பாகிஸ்தான் பேட்டிங்கை டெஸ்ட் போட்டிகளில் தனது ஷார்ட் பிட்ச் அச்சுறுத்தல் பந்து வீச்சில் காலி செய்த டுவேன் ஆலிவியர் ஒரு நாள் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தன் முதல் ஒரு நாள் போட்டியில் பங்கேற்கிறார். அதே போல் அய்டன் மார்க்ரம் அணிக்குள் வந்துள்ளார்.

டி காக் இல்லாததால் ஹென்றிக் கிளாசன் கீப்பிங் பணியை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் முடிந்த 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 14.70 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற சராசரியில் ஆலிவியர் 24 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடம் வகித்தார்.

உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு கூடுதல் பவுலரை அணியில் சேர்த்து ஸ்டெய்னின் பணிச்சுமையை குறைக்கும் நோக்கத்துடன் ஆலிவியர் சேர்க்கப்பட்டுள்ளார் என்றாலும், டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் பேட்ஸ்மென்களின் வயிற்றில் புளியைக் கரைத்த இவர் ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்வார் என்ற எதிர்பார்ப்பில்தான் எடுக்கப்பட்டுள்ளார்.

முதல் 2 ஒருநாள் போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்க அணி வருமாறு:

டுபிளெசிஸ் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா, அய்டன் மார்க்ரம், ரீஸா ஹென்றிக்ஸ், இம்ரான் தாஹிர், ஹெய்ன்ரிக் கிளாசன், டேவிட் மில்லர், டேன் பேட்டர்சன், ஆண்டில் பெலுக்வயோ, டிவைன் பிரிடோரியஸ், கேகிஸோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, ஆலிவியர், ரஸீ வான் டெர் ட்யூஸென்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in