வெளிச்சமின்மையினால் இன்று முடிக்கப்பட்ட சிட்னி டெஸ்ட்: செல்போன் டார்ச்சை அடித்து நடுவர்கள் முடிவுக்கு ரசிகர்கள் அதிருப்தி

வெளிச்சமின்மையினால் இன்று முடிக்கப்பட்ட சிட்னி டெஸ்ட்: செல்போன் டார்ச்சை அடித்து நடுவர்கள் முடிவுக்கு ரசிகர்கள் அதிருப்தி
Updated on
1 min read

சிட்னி டெஸ்ட் போட்டியில் 4ம் நாளான இன்று இந்திய அணி 3-1 என்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்து வரும் நிலையில் வெறும் 25.2  ஓவர்களே சாத்தியமாகி, போதிய வெளிச்சமில்லை என்று ஆட்டத்தை நடுவர்கள் முடித்து வைத்தனர்.

இதில் ரசிகர்கள் பலருக்கும் கடும் அதிருப்தி ஏற்பட்டு, தங்களது செல்போன் டார்ச் வெளிச்சத்தை அடித்துக் காட்டி நடுவர்கள் ஆட்டத்தை  தொடங்க வேண்டும் என்று குறிப்பால் வலியுறுத்தினர்.

ரசிகர்கள் மட்டுமல்ல மூத்த ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ராபர்ட் கிரடாக் கூறும்போது, “டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இது உதவிகரமானதல்ல. ஆலன் பார்டர் ஓய்வு பெற்றபோது என்னிட்ம ஒன்றைக் கூறினார், அதாவது தன் வாழ்நாளில் ஒரு முறை கூட போதிய வெளிச்சமின்மை என்ற காரணத்தினால் நான் ஆட்டத்திலிருந்து வெளியே வந்ததில்லை என்றார்.  இன்று இன்னும் 30-40 ஓவர்கள் ஆடியிருக்க வேண்டும். பிக்பாஷ் ஆட்டம் முழுதும் நடைபெறுகிறது.

இன்று ஆடப்பட்ட ஷாட்டில் எதுவும் வெளிச்சமின்மை என்ற உணர்வு எனக்கு வரவில்லை. 2 ஸ்பின்னர்கள்தான் அதிகம் வீசப்போகிறார்கள், எனவே ஆட்டத்தை நிறுத்தியஹ்டு தவறு” என்று சாடியுள்ளார்.

கிரிக்கெட் வரணனையாளர் ஹர்ஷா போக்ளேயும், தன் ட்விட்டரில், “25.2 ஓவர்கள்தான் இன்று வீசப்பட்டுள்ளது. லைட் மீட்டர்கள் குறித்த வரையறைகள் தேவை. டெஸ்ட் கிரிக்கெட்டில் முடிந்தவரை ஆட்டத்தை நடத்தவே பார்க்க வேண்டும். இன்னும் அதிக நேரம் ஆடப்பட்டிருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ஆகவே நடுவர்கள் ஆட்டத்தை வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தியது பரவலான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in