

பிரேசில் கால்பந்து மேதை பீலே மற்றும் உலகக்குத்துச் சண்டை சாம்பியன் மொகமது அலி ஆகியோர் போல் ஆட்டத்தின் உச்சத்தில் இருக்கும்போதே டென்னிஸிலிருந்து ஓய்வு பெற விரும்புகிறேன் என்று லியாண்டர் பயஸ் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வது அத்தகைய உச்சத்தைக் குறிப்பதாகும் என்று பெங்களூரில் இன்று பயஸ் தெரிவித்தார்.
பிடிஐ செய்தி ஏஜென்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வது எனது டென்னிஸ் வாழ்க்கையின் உச்சமாகக் கருதுகிறேன், ஆகவே அந்த நிலையுடன் டென்னிஸிற்கு விடைகொடுக்க விரும்புகிறேன்.
இந்த விஷயத்தில் நான் பீலே, மொகமது அலி, மைக்கேல் ஜோர்டான், கார்ல் லூயிஸ், ராட் லேவர் (ஆஸ்திரேலிய டென்னிஸ் சாம்பியன், 4 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் ஒரே ஆண்டில் வென்றவர்) ஆகியோரை முன்னுதாரணமாகக் கொள்ள நினைக்கிறேன்” என்றார்.
14 கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் பட்டங்களையும் ஒலிம்பிக் வெண்கலமும் வென்ற பயஸ் பயிற்சியில் தனது விடாப்பிடித் தனத்தை வலியுறுத்தினார்