சென்னை அணிக்கு வலு சேர்ப்பார் டிவைன் பிராவோ: தோனி

சென்னை அணிக்கு வலு சேர்ப்பார் டிவைன் பிராவோ: தோனி
Updated on
1 min read

சென்னை அணிக்கு டிவைன் பிராவோ திரும்பியிருப்பது அணிக்கு வலிமையைக் கூட்டும் என்று கேப்டன் தோனி கூறியுள்ளார்.

நாளை ஐதராபாத்தில் சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகளின் பிரதான சுற்றில் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ், கம்பீர் தலைமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மேற்கிந்திய ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ திரும்பியுள்ளது அணிக்கு பெரிய வலிமை என்று கேப்டன் தோனி கூறியுள்ளார்.

"ஐபில் கிரிக்கெட் தொடர் சயமத்தில் டிவைன் பிராவோ காயமடைந்ததால் விளையாட முடியவில்லை. இதனால் அணியின் வலிமை, சேர்க்கை, மற்றும் உறுதித் தன்மை பாதிக்கப்பட்டது. அவர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளது வலு சேர்க்கும்.

இந்த முறை சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டிற்கு முன் 10 நாட்கள் கூட ஓய்வு கிடைக்கவில்லை. ஒருநாள் கிரிக்கெடி விளையாடி முடித்து இங்கிலாந்திலிருந்து வீரர்கள் திரும்பியுள்ளனர்.

என்னைப் பொறுத்தவரை நானே ஒரு நாள் முன்புதான் ஐதராபாத் வந்தேன். ஆகவே அணியினருடன் நேரம் செலவிடமுடியவில்லை. ஐபிஎல் கிரிக்கெட்டிற்குப் பிறகு மீண்டும் அணியுடன் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் கருத்தளவில் அபாரமானது. ஆனால் இந்திய அணிகள் விளையாடாத போட்டிகளில் ரசிகர்களை மைதானத்திற்கு ஈர்ப்பது பெரிய சவால். 2 அயல்நாட்டு அணிகள் விளையாடும் போது ரசிகர்கள் கூட்டம் பெரிதாக இருக்காது. ஆனால் இதுவும் சவால்தான்”

இவ்வாறு கூறினார் தோனி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in