

ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடரில் கோவை நேரு விளையாட்டரங்கில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சிட்டி எஃப்.சி - கோகுலம் கேரளா எஃப்.சி மோதுகின்றன.
சென்னை சிட்டி அணி 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியுடன் 21 புள்ளிகள் பெற்று பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக் கம் செலுத்துகிறது. அதே வேளையில் கோகுலம் கேரளா அணி 10 ஆட்டத்தில் 2 வெற்றி, 4 டிரா, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகளுடன் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.
சென்னை சிட்டி அணி கடைசி யாக மேகாலயா ஷில்லாங் லஜோங் அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய உற் சாகத்தில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது.
அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் அக்பர் நவாஸ் கூறுகையில், “கடந்த போட்டி யில், மேகாலயாவின் ஷில்லாங் லஜோங் அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தினோம். இதனால் மிகுந்த உற்சாகத்துடன் கேரளா அணியை எதிர்கொள் கிறோம். இந்த ஆட்டத்திலும் வெற்றி பெறும் முனைப்புடன் தீவிர பயிற்சிகள் செய்துள் ளோம்” என்றார்.
கேரள அணியின் பயிற் சியாளர் பினோ ஜார்ஜ் கூறுகை யில், “பலம் வாய்ந்த சென்னை சிட்டி அணியை எதிர்கொள் கிறோம். எனினும் வெற்றி பெற கடுமையாகப் போராடுவோம்” என்றார்.