Published : 26 Jan 2019 03:13 PM
Last Updated : 26 Jan 2019 03:13 PM

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்: நெட்டிசன்கள் பாராட்டு

நியூசிலாந்து வீரர்  ராஸ் டிரெய்லரை மின்னல் வேகத்தில் இந்திய அணி வீரர் தோனி அவுட் ஆக்கினார்.

கள நடுவரே சற்று நேரம் ஆச்சரியப்பட்டு அவுட்டா? இல்லையா? என்ற முடிவை மூன்றாவது நடுவருக்கு அனுப்பினார். இதனைத் தொடர்ந்து ராஸ் டிரெய்லர் அவுட் என்று அறிவிக்கப்பட்டது. தோனியின் இந்த மின்னல் வேகம் ஸ்டெம்பிங்கை நெட்டிசன்கள் பலரும் பாராட்டினர்.

 

இது குறித்து நெட்டிசன்களின் கருத்துகள்:

பட்டாசு

போல்டா, ஸ்டெம்பிங்கான்னு தெரியாத அளவுக்கு ஸ்பீடு.

தோனி அப்பீல்னா உடனே அம்பயர் கையைத் தூக்கிடுறாப்ல.

ரகுவரன்

இந்தாளு மேட்ச்ல இருக்குற வரைக்கும் கேப்டனுக்கு வேலையே இருக்காது.  

மஞ்சப்பை

மின்னல் ️

மறு பெயர் தோனி

Guru official ™

நீ யாரா இரு எவனா இரு ஆனா தோனி பின்னால கீப்பிங் பண்ணும் போது கால தூக்காம இரு.

இளநி

யாரென்று தெரிகிறதா ? தோனி  என்று புரிகிறதா ?

பிரேம்குமார்

தோனி மேஜிக்குகள் நவ்!

ராஜி

இதையெல்லாம் பண்ண இனிமே தான்டா ஒருத்தன் பொறந்து வரணும்... The name is number seven...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x