Last Updated : 17 Jan, 2019 09:19 AM

 

Published : 17 Jan 2019 09:19 AM
Last Updated : 17 Jan 2019 09:19 AM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; 3-வது சுற்றில் பெடரர், வோஸ்னியாக்கி

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ் லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றுக்கு ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ் லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் மெல்பர்ன் நகரில் நடை பெற்று வருகிறது. நேற்று நடை பெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் ரோஜர் பெடரரும், பிரிட்டன் வீரர் டான் எவான்ஸும் மோதினர்.

இதில் பெடரர் 7-6 (7/5) 7-6 (7/3) 6-3 என்ற கணக்கில் எவான்ஸை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறி னார். மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 6-3, 6-2, 6-2. என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டனை வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர் சன் அதிர்ச்சித் தோல்வி கண்டார். அமெரிக்க வீரர் பிரான்சஸ் டியாபோ 4-6, 6-4, 6-4, 7-5 என்ற கணக்கில் கெவினைச் சாய்த்தார்.

மகளிர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை யும், மகளிர் டென்னிஸ் வீராங்கனை தரவரிசையில் முதல் இடத் தில் இருந்தவருமான விக் டோரியா அசரென்கா தோல்வி கண்டார்.

ஜெர்மனி வீராங்கனை லாரா சீகேமண்ட் 6-7 (5/7) 6-4 6-2 என்ற செட் கணக்கில் விக்டோரியாவை வீழ்த்தினார்.

மற்றொரு 2-வது சுற்று ஆட்டத் தில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 6-2, 6-2 என்ற கணக்கில் பிரேசில் வீராங்கனை ஹட்டாட் மையாவை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

பிறிதொரு ஆட்டத்தில் டென் மார்க்கின் கரோலின் வோஸ்னி யாக்கி 6-1, 6-3 என்ற நேர் செட்களில் ஸ்வீடனின் ஜோஹன்னா லார் சனைத் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இரட்டையர் பிரிவில் இந்தியா வின் ரோஹன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி தோல்வி கண்டது.

நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் பாப்லோ கரேனோ புஸ்டா-கில்லர்மோ கார்சியா லோபஸ் ஜோடி 1-6 6-4 5-7 என்ற செட் கணக்கில் போபண்ணா-சரண் ஜோடியைச் சாய்த்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x