பேபி சிட்டர் ரிஷப் பந்த்: போட்டோவைப் பதிவிட்ட பெய்ன் மனைவி

பேபி சிட்டர் ரிஷப் பந்த்: போட்டோவைப் பதிவிட்ட பெய்ன் மனைவி
Updated on
1 min read

இந்திய வீரர் ரிஷப் பந்த் ஆஸ்திரேலிய கேப்டன் பெய்னின் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை 'பேபி சிட்டர்' (குழந்தைகளைப் பராமரிப்பவர்) என்று அவரது மனைவி வெளியிட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

இந்திய வீரர் ரிஷப் பந்த்தும் ஆஸ்திரேலிய கேப்டன் பெய்னும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின்போது வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இதில் பெய்ன் ரிஷப் பந்த்தை நோக்கி பேபி சிட்டராக (குழந்தைகளைப் பராமரிப்பவர்) இருப்பீர்களாக என்று கிண்டலாகக் கேட்டிருந்தார்.

இந்த நிலையில் பெய்னின் மனைவி பாம் பெய்ன் அவரது குழந்தைகளுடன் ரிஷப் பந்த் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”சிறந்த  பேபி சிட்டர் ரிஷப் பந்த்” என்று ஸ்டேடஸ் ஆக பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆரோக்கியமான விஷயம் என்று குறிப்பிட்டு ரிஷப் பந்த்தைப் பாராட்டி வருகின்றனர்.

முன்னதாக, மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில், ரிஷப் பந்த் ஆஸ்திரேலிய வீரர்களின் பின்னால் நின்று கொண்டு கீப்பிங் வேலையுடன் கிண்டலையும் தன் வேலையாகச் செய்தார்.

இதனால் ரிஷப் பந்த் களமிறங்கியபோது பெயன் அவருக்குப் பின்னால் நின்று கொண்டு, ”ஒரு நாள் போட்டிக்கு தோனி வந்து விட்டார். நாம் இவரை (ரிஷப் பந்த்தை) ஹோபார்ட் ஹரிகேன்ஸுக்கு எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு பேட்ஸ்மென் தேவை.  ஆஸ்திரேலிய விடுமுறையை கொஞ்சம் நீட்டித்துக் கொள்...

ஹோபார்ட் மிக அழகான நகரம்.. அங்கு இவருக்கு நல்ல வாட்டர்ஃபிரண்ட் அபார்ட்மெண்ட்டை அளிக்கலாம்...நான் என் மனைவியை சினிமாவுக்கு அழைத்துச் செல்லும் போது  என் குழந்தைகளை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று கிண்டல் செய்தார் .

இதற்கு  ரிஷப் பந்த் , ”ஆஸ்திரேலிய கேப்டன் பெய்னை தற்காலிகக் கேப்டன் என்றும், அவருக்கு பேச மட்டும்தான் தெரியும்” என்றும் பதிலடி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in