பிஃபா சார்பில் மோடிக்கு ஜெர்சி
அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் ஜி 20 உச்சி மாநாடு கடந்த நவம்பர் 30 முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சர்வதேச கால்பந்து விளையாட்டு சம்மேளனத்தின் தலைவர் கியானி இன்ஃபான்டினோவை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது கியானி இன்ஃபான்டினோ, மோடிக்கு அவரது பெயர் அச்சிடப்பட்ட ஜெர்சியை பரிசாக வழங்கினார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “அர்ஜெண்டினாவுக்கு வரும் போது கால்பந்தாட்டத்தை நினைக்காமல் இருக்க முடியாது. அந்நாட்டின் வீரர்கள் இந்தியா வில் மிகவும் புகழ்பெற்றுள்ளனர். பிஃபா தலைவர் கியானி இன் ஃபான்டினோவிடமிருந்து ஜெர் சியை பெற்றுக்கொண்டேன். இந்த தருணத்தில் அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கி றேன்” என்று தெரிவித்துள்ளார்.
