

80-வது அகில இந்திய ரயில்வே தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் பிரிவில் தெற்கு மண்டலமும், மகளிர் பிரிவில் மத்திய மண்டலமும் சாம்பியன் ஆகின. ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் மேற்கு மண்டல அணி 2-வது இடத்தைப் பிடித்தது.
சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டி புதன்கிழமை நிறைவு பெற்றது. 44 பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 374 தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் கம்பு ஊன்றித் தாண்டுதல் வீராங்கனை சுரேகா தொடர்ந்து 11-வது ஆண்டாக தங்கப் பதக்கம் வென்றார். நிறைவு விழாவில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.