

தி முத்தூட் குரூப் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் பள்ளிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்களில் ஆர்கேஎஸ் கல்வி நிலையம், ஸ்ரீரங்கம் பாய்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் பள்ளி களிடையிலான டி20 கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் நேற்று கோவை, திருச்சி நகரங்களில் நடைபெற்றன.
கோவையில் நடைபெற்ற ஆட் டத்தில் ஆர்கேஎஸ் கல்வி நிலையம் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் மணி எச்எஸ்எஸ் பள்ளி அணியை வென்றது. முதலில் ஆடிய ஆர்கேஎஸ் கல்வி நிலையம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய மணி எச்எஸ்எஸ் பள்ளி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்ரீ ஜெயந் திர சரஸ்வதி வித்யாலயா பள்ளி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா எம்எச்எஸ்எஸ் அணியை தோற்கடித்தது. முதலில் விளையாடிய ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் குவித்தது.
பின்னர் விளையாடிய ஸ்ரீராமகிருஷ்ணா எம்எச்எஸ்எஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்து வீழ்ந்தது.
திருச்சியில் நடைபெற்ற ஆட்டத் தில் ஆல்பா பள்ளி அணி 7 விக் கெட்கள் வித்தியாசத்தில் மகாத்மா காந்தி சி.வி பள்ளி அணியை வென்றது. முதலில் விளையாடிய மகாத்மா காந்தி பள்ளி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய ஆல்பா அணி 7.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆர்கேடி ஸ்ரீஹரன் 34 ரன்கள் குவித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் நேஷனல் கல்லூரி பள்ளி அணியும், ஸ்ரீரங்கம் பாய்ஸ் பள்ளி அணியும் மோதின.
இதில் ஸ்ரீரங்கம் பாய்ஸ் பள்ளி அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் நேஷனல் கல்லூரி பள்ளி அணியை வீழ்த்தியது.
முதலில் விளையாடிய ரங்கம் பாய்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்களைக் குவித்தது.
பின்னர் விளையாடிய நேஷனல் கல்லூரி பள்ளி அணி 19.4 ஓவர் களில் 108 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது.
ஜே.ஆஷிக் அகமது 20 ரன்கள் சேர்த்தார்.
எம்.விக்னேஸ்வரன் 34 ரன்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.