சென்னை ஓபன்: டிப்சரேவிச் பங்கேற்கிறார்

சென்னை ஓபன்: டிப்சரேவிச் பங்கேற்கிறார்
Updated on
1 min read

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியனான செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டுக்கான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வரும் ஜனவரி 5 முதல் 11-ம் தேதி வரை சென்னை நுங் கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடை பெறவுள்ளது. 2015 சீசனை சென்னை ஓபனில் இருந்து தொடங்குகிறார் டிப்சரேவிச். 7-வது ஆண்டாக சென்னை ஓபனில் பங் கேற்கவுள்ள அவர், 2013-ல் இங்கு சாம்பியன் பட்டம் வென்றார்.

முன்னதாக 2012-ல் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் மிலோஸ் ரயோனிச்சிடம் தோல்வி கண்ட டிப்சரேவிச், இரட்டையர் பிரிவில் பயஸுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹிட்டேன் ஜோஷி வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிப்சரேவிச் காயத்திலிருந்து மீண்டு டென்னிஸுக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 2015 சீசனின் தொடக்க போட்டியான சென்னை ஓபனில் பங்கேற்பதை அவர் உறுதி செய்துள்ளார்” என குறிப் பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in