Published : 08 Dec 2018 01:58 PM
Last Updated : 08 Dec 2018 01:58 PM

பாகிஸ்தானுடனான வரலாற்று வெற்றி: கப்பை விளம்பரதாரர்களிடம் வாங்காமல் தானாக எடுத்துச் சென்ற வில்லியம்சன்; வலுக்கும் விமர்சனம்

அபுதாபியில் நடந்த பாகிஸ்தான் உடனான டெஸ்ட்  தொடரை நியூஸிலாந்து அணி 47 வருடங்கள் கழித்து அயல் மண்ணில் வெற்றிகொண்டது.

இந்தத் தொடர் முடிவில் கோப்பை வழங்கும் நிகழ்வில், நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் நடந்து கொண்ட முறை விமர்சனத்துக்கு உள்ளானது.

280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 5-ம் நாளில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்ததையடுத்து நியூஸிலாந்து அணி பாகிஸ்தானை அயல் மண்ணில் 49 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் வென்றது. 

இதனைத் தொடர்ந்து நடந்த  நிகழ்ச்சி நிறைவில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணியின் கேன் வில்லியம்சனிடம் கோப்பை வழங்குமாறு போட்டியை நடத்திய விளம்பரத்தாரர்களிடம் வர்ணனையாளர் கூற, கேம் வில்லியம்சன் நேர வந்து அவராக கப்பை எடுத்துச் சென்று விடுவார். மேலும் தனது அணி வீரர்களிடமிருந்த விளம்பரதாரர்களின் அட்டையை தூக்கி ஓரமாக எறிந்துவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்.

வில்லியம்சனின் இந்தச் செயல் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.

 

ஒரு அணியின் கேப்டன் இவ்வாறு நடக்கக் கூடாது என்று பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x